May 21, 2026
Thisaigal NewsYouTube
அமானா தேசிய மாநாடு இன்று தொடங்கியது
தற்போதைய செய்திகள்

அமானா தேசிய மாநாடு இன்று தொடங்கியது

Share:

அமானா கட்சியின் தேசிய தலைமைக் குழுவின் 27 உறுப்பினர்கள், 5 உயர் பதவிகள் தேர்ந்தெடுப்பது போன்றவை இன்று தொடங்கிய தேசிய மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

2023 முதல் 2026 ஆம் ஆண்டுக்கான அமானா கட்சி தேர்தலில், டத்தோஸ்ரீ முகமட் சாபு, அமானா தலைவர் பதவிக்கும், செனட்டர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப், துணை பாதுகாப்பு அமைச்சர் அட்லி ஜஹாரி, அமானா கட்சியின் வியூகப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர். சுல்கேப்ளி அஹ்மட் போன்றவர்கள் துணைத்தலைவர் பதவிக்கும் மற்றும் 124 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுப்படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரான டத்தோ ஶ்ரீ முகமட் சாபு இன்று காலை 10 மணியளவில் தனது உரையை நிகழ்த்தி இந்த இரண்டு நாள் மாநாட்டை தொடக்கி வைத்தார்.

Related News