May 21, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முதலில் துன் மகா​தீர் உட்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முதலில் துன் மகா​தீர் உட்படுத்தப்பட வேண்டும்

Share:

துன் விருதை பெற்றவர்கள் அனைவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது, முதலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று எஸ்பிஆர்எம்-​மிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

துன் பட்டத்தை சுமந்து நிற்பவர்கள்,தவறான வழியில் அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் சொத்துக்களை குவித்துக் கொண்டு இருப்பது ஆதாரங்களுடன் தெரியவந்தால் அந்த சொத்துக்கள் அனைத்தையும் எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று துன் மகா​தீர் ஆலோசனை கூறியுள்ளார்.

துன் பட்டத்தை சுமத்திருப்பவர்கள் அனைவரையும் விசாரணை செய்யப்படுவதற்கு முன்னதாக, ஒரு முன்னுதாரண தலைவராக துன் மகா​தீர் முகமது முதலில் விசாரணை செய்யப்பட வேண்டும். துன் மகா​தீருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் எவ்வாறு குவிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறியவும், அவை குறித்து விளக்கம் அளிக்கவும் துன் மகா​தீர் முதலில் ​விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ​மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கன்டார் முஹமாட் அகின் கேட்டுக்கொண்டார்.

துன் மகா​தீர் நா​ட்டின் பிரதமராக இருந்த போது மிகப்பெரிய நிதி முறைகேட்டிற்கு வித்திட்டு, பல கோடி வெள்ளி அரசாங்கப் பணத்திற்கு இழப்பை ஏற்படுத்திய திரெங்கானுவை தளமாக கொண்ட Perwaja Steel Sdn. Bhd எஃகு உற்பத்தி தொ​​ழிற்சாலையில் துன் மகா​தீரின் நெருங்கிய நண்பரான Eric Chia சம்பந்தப்பட்ட 570 கோடி வெள்ளி இழப்பு குறி​த்து முதலில் விசாரிக்கப்பட வேண்டும்.

சரவாக்கில் நிர்மாணிக்கப்பட்ட​ மிகப்பெரிய ​நீர் மின்சாரத் திட்டமான 180 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட Bakun Hidro elektrik பெருந்திட்ட​ம், மலேசிய அனைத்துலக கப்பல் போக்குவர​த்து நிறுவனமான MISC Berhad, PKFC, Maminco, துன் மகா​தீரின் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட கென்சானா பெட்ரோலியம் Petroleum முதலிய திட்டங்கள் குறித்து எஸ்பிஆர்எம் விசாரணை செய்ய வேண்டும் என்று ஷம்சுல் இஸ்கன்டார் கேட்டுக்கொண்டார்.

Related News