May 21, 2026
Thisaigal NewsYouTube
பெண் முதலாளி வெட்டிக்கொலை, பணியாளர் கைது
தற்போதைய செய்திகள்

பெண் முதலாளி வெட்டிக்கொலை, பணியாளர் கைது

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.4
பேரா, மெங்லெம்பு அருகில் தாமான் ராசி ஜெயா என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் நடந்த வெட்டுக் கத்தி தாக்குதல் சம்பவத்தில் அந்த கடையின் பெண் முதலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரின் ஆண் நண்பர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அந்த கடையின் வளாகத்தில் நிகழ்ந்தது. இதில் கடும் வெட்டுக்காயங்களுக்கு ஆளான 40 வயது பெண் முதலாளி அந்த கடையிலேயே உயிரிழந்தார்.

அவரின் 42 வயது ஆண் நண்பர் கடும் வெட்டுக்காய்ஙகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் அந்த கடையில் வேலை செய்த பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடையின் பெண் முதலாளிக்கும், பணியாளருக்கும் இடையில் பணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அந்த பணியாளர், முதலாளியை வெட்டிக்கொன்று இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது..

Related News