May 20, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

Share:

ஷா ஆலம், செக்சியன் 14 பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில், சிலாங்கூர் குற்றப்புலனாய்வு துறையைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3.07 மணியளவில் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கான்.

சம்பவ இடத்திலேயே அந்த அதிகாரி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை, இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு