May 20, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

Share:

பேராக் மாநிலம், தஞ்சோங் ரம்புத்தான் பகுதியில், கடந்த வாரம் 18 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஐந்து ஆடவர்கள் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

22 வயதான எஸ்.கே. ஸ்ரீ சக்தி வேல், 33 வயதான கே. திருச்செல்வன், 36 வயதான ஷஷிபால் சிங் மன்மோகன் சிங், 24 வயதான என். தனேஷ்வரன் மற்றும் 35 வயதான பி. உகேந்திரன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், நீதிபதி நொரிசான் ரிடுவான் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அதனை புரிந்துகொண்டதாக தலைஅசைத்தனர்.

இவர்கள் மீது பொதுவான நோக்கத்துடன் கூட்டாகக் குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கருதி, குற்றவியல் சட்டம் பிரிவு 34 உடன், கொலை குற்றத்திற்கான பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐந்து பேரும், தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபருடன் சேர்ந்து, கடந்த மே 12-ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை,ஜாலான் பெர்பாடுவான் சவுத்வேர்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் அருகே, 18 வயதான எஸ்.கே. கிருஷ்ணன் என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படி தண்டனைகள் விதிக்கப்படலாம்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்