May 20, 2026
Thisaigal NewsYouTube
புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

Share:

புடி95 மானியத் திட்டம் தொடர்பாக டிக்டாக்கில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றத்திற்காக, தனியார் வாகன ஓட்டுநர் மற்றும் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் ஆகிய இருவருக்கு, சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம், இன்று தலா 4,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

29 வயதான முகமது ஐமான் சைனி சத்தார், 46, ரோம்ஃபாஸ்லி ஷாம் முகமது மொக்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள், மிகவும் கடுமையானது என்றும், இது பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கேடு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிபதி அகமது ஃபுவாட் ஒத்மான் எச்சரித்துள்ளார்.

குற்றச்சாட்டின்படி, அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, பொதுமக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், டிக்டாக்கில் பொய்யான பதிவொன்றை உருவாக்கி, அதனை தெரிந்தே பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் மீது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) 1998 இன் பிரிவு 233(1)(a)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்