May 21, 2026
Thisaigal NewsYouTube
மித்ரா தனது இலக்கை அடைந்தது ! கெட்டப் பெயர் நீங்கியது !
தற்போதைய செய்திகள்

மித்ரா தனது இலக்கை அடைந்தது ! கெட்டப் பெயர் நீங்கியது !

Share:

மித்ராவின் சிறப்புப் பணிக்குழு 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கை 100 சதவிகிதம் அடைந்திருப்பதாக தொழில் முனைவர் மேம்பாடு, கூட்டுரவுக் கழக துணை அமைச்சர் டத்தோ ஆர் ரமணன் தெரிவித்தார். முதன் முறையாக மித்ராவின் நிதி திருப்பி அனுப்பப்படாமல் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் அது நேர்மையாகக் கையாளப்பட்டுள்ளது எனவும் அவர் சொன்னார்.

எதிர்காலத்தில் மித்ராவுக்கு யார் பொறுப்பேற்றாலும், அதனை வழிநடத்த ஒரு நல்ல, உறுதியான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது

இந்த நாட்டில் இந்திய சமூகத்தின் B40 பிரிவின் மேம்பாடு மிக முக்கியமானது. எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கு முறையான கல்வியும் அதிக ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளும் மிக மிக அவசியம், அந்த இலக்கை மித்ராவைக் கொண்டு அடைய வேண்டும் என ரமணன் சொன்னார்.

2023ஆம் ஆண்டில், 1 கோடியே 90 லட்சத்து 29 ஆயிரத்து 325 வெள்ளி மதிப்பிலான பொருளாதார மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு திட்டங்களையும் 58 லடத்து 65 ஆயிரத்து 615 வெள்ளி மதிப்பிலான சம்முக மேம்பாடு திட்டங்களையும் 40 லட்சத்து 62 ஆயிரத்து 145 வெள்ளி மதிப்பிலான மனித மூலதனத் திட்டங்களையும் மித்ரா ஏற்பாடு செய்தது என டத்தோ ஆர் ரமணன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், மிதாரவுக்கு ஏற்பட்டக் கலங்கம் போக்கப்பட்டு குறைந்த ஆபத்து மதிப்பீட்டை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. என்றார்

Related News