May 21, 2026
Thisaigal NewsYouTube
அபராதம் செலுத்த போலி போஸ்டர்
தற்போதைய செய்திகள்

அபராதம் செலுத்த போலி போஸ்டர்

Share:

டிஏபி கட்சியைச் சார்ந்த சில தலைவர்கள் மீது அவதூறு பரப்பிய விவகாரத்தில், அபராதத்தைச் செலுத்த பொது மக்களின் நன்கொடையை நாடுவதாகப் போலி போஸ்டர் வைரலாகி உள்ளது. அந்த விவகாரம் தொடர்பில், பாஸ் கட்சியின் கெப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா வழக்கறிஞரின் ஆலோசனையை நாட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் பினாங்கு மாநில மகளிர் அணியினர் பொது மக்களின் நன்கொடையை நாடுவதாகவும் வழக்கு நடைபெறுவதால் அதன் நொர்வாகச் செலவும் 30 ஆயிரம் வெள்ளிக்கும் மேல் தேவைப்படக் கூடும் என அந்தப் போலி போஸ்டரில் குறிப்பிடப்படுவதாக சித்தி மஸ்துரா குறிப்பிட்டிருந்தார்.

இவ்விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தமது தரப்பு வழக்கறிஞர் முடிவு செய்வார் எனக் கூறிய அவர், அந்தப் போலி போஸ்டரை பாஸ் கட்சியின் பினாங்கு மாநில மகளிர் பிரிவு வெளியிட வில்லை எனக் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக சித்தி மஸ்துரா கூறினார்.

Related News