May 21, 2026
Thisaigal NewsYouTube
கிராமப்புறங்களில் அதிகமானோர் பாடு பதிவு
தற்போதைய செய்திகள்

கிராமப்புறங்களில் அதிகமானோர் பாடு பதிவு

Share:

ஜனவரி 2 முதல் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்ட பாடு என்கிற முதன்மை தரவு தளத்தின் பதிவு திட்டம் 29 மில்லியன் மலேசியர்களின் இலக்கை உறுதி செய்வதற்கு கிராமப்புறங்களில் உள்ள சமூக தலைவர்களின் பங்கு முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

பாடு திட்டத்திலிருந்து பொதுமக்கள் விடுபடாமல் இருப்பதற்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய மாநில அரசின் பங்கும் உள்ளடங்கும் என்று தலைமை புள்ளியியல் நிபுணரான டத்தோ ஶ்ரீ முஹமாட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

தகவல் துறை மேற்கொண்ட முயற்சியினால் இதுவரையில் கிராமப்புற இடங்களில் பாடு - வை பதிவு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக முஹமாட் உசிர் கூறினார்.

நேற்று இரவு 8 மணி வரையில் 396,181 பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன் மேம்பாடுகளை எளிதாக செய்வதற்கு வழிவகுக்கிறது என்று முஹமாட் உசிர் அறிவித்தார்.

Related News