May 21, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையைக் கடத்திய 3 பதின்ம வயதினர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குழந்தையைக் கடத்திய 3 பதின்ம வயதினர் மீது குற்றச்சாட்டு

Share:

7 வயது சிறுவனைக் கடத்தியதாக 3 பதின்ம வயதினர் மீது ஜோகூர் பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஜோகூர் பாரு, ஜாலான் செரம்பாங் சாலை ஓரத்தில் மாலை மணி 5.15 அளவில் இக்குற்றத்தை புரிந்ததாக மஜிஸ்ட்ரெட் ஆர் சாலினி முன்னிலையில் மண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை 18, 17. 15 வயதுடைய அந்த மூவரும் மறுத்தனர்.

நீதிமன்றம் அந்த மூவரையும் தலா 2 ஆயிரத்து 500 வெள்ளி மதிப்பிலான ஜாமினில் விடுதலை செய்தது. வயது குறைந்த அவர்களை தங்களின் பெற்றோர் அல்லது முறையான பாதுகாவலர் ஆகியோரால் மட்டுமே ஜாமினில் மீட்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, அடுத்த மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related News