May 21, 2026
Thisaigal NewsYouTube
'சூப்பர்மேன்' போல மோட்டார் சைக்கிளை ஓட்டிய நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

'சூப்பர்மேன்' போல மோட்டார் சைக்கிளை ஓட்டிய நால்வர் கைது

Share:

ஜம்பாத்தான் அஹ்மாட் ஷா லெபோராயா பந்தாய் திமூர் 1 (LPT 1) - யில் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஒரு பள்ளி மாணவனும் சூப்பர்மேன் போல மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதால் போலீசார் கைது செய்தனர்.

யமாஹா Y15ZR ரக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சென்ற 15 க்கும் 22 க்கும் உட்பட்ட மாணவர்கள் கைகளிலும் கால்களிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக தெமெர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

இதுக்குறித்து சம்பவத்தில் இருந்த மாணவன் ஒருவர் 28 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கும் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மஸ்லான் ஹாஸ்ஸான் கூறினார்.

மேல் விசாரணைக்கு அந்நால்வரும் காவல்துறைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் மேலும் ஒரு நபர் தேடப்பட்டு வருவதாகவும் மஸ்லான் ஹாஸ்ஸான் விளக்கினார்.

Related News