May 21, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் திருட்டு - நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு - நால்வர் கைது

Share:

அம்பாங் ஜெயா. கம்போங் தாசேக் பெர்மாயில் மோட்டார் சைக்கிள் திருடுபோன சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohd Azam Ismail தெரிவித்தார்.

கடந்த 3 மாதங்களில் இந்த கும்பல், செர்டாங், சிப்பாங் ஆகிய வட்டாரங்களிலும் தங்களின் கைவரிசையைக் காட்டி இருக்கிறது.


போலீஸ் புகாரைத் தொடர்ந்து, 28 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட இரு ஆடவர்கள், இரு பெண்கள் ஆகியோரை ஷா ஆலாம், ஜாலான் புக்கிட் கெமுனிங் பத்து 8 பகுதியில் நேற்று 1.25 அதிகாலையில் கைது செய்துள்ளதாக Mohd Azam கூறினார்.

அப்போது, 4 மோட்டார் சைக்கீல்கள், 4 தலைக்கவசங்கள், மோட்டார் சைக்கிள்களைத் திருட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில கருவிகள், கைப்பேசிகள், மடிக்கணினிகள், போலி பதிவு எண் பட்டைகள் போன்றவையும் போலீசால் கைப்பற்றப்பட்டன.

கைப்பஅ[[அட்ட மோட்டார் சைக்கிள்கள் அம்பாங் ஜெயா, சிப்பாங், செர்டாங் ஆகிய வட்டாரங்களில் காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்டவையாகும்.

கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்காக நாளை தொடங்கி 4 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கல் ஏணா Mohd Azam தெரிவித்தார்.

Related News