May 21, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பேர்வழிகள் தேடப்பட்டு வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு பேர்வழிகள் தேடப்பட்டு வருகின்றனர்

Share:

சிபு, ஜாலான் வோங் கிங் ஹோவில் நேற்று மாலையில் காப்பிக் கடை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாலை 5.41 மணியளவில் ஆடவர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து அந்த காப்பிக் கடைக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த தலைக்கவசம் அணிந்திருந்த இரு நபர்கள் தற்போது தேடப்பட்டு வருவதாக சிபு மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிப்லி சுஹாய்லி தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயம் அடைந்தனர். 9mm ரகத்தைச் சேர்ந்த ஒன்பது தோட்டாக்கள் வெளியேறியிருப்பது விசாரணயில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News