May 21, 2026
Thisaigal NewsYouTube
பழுதடைந்த காரை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

பழுதடைந்த காரை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்

Share:

புதியதாக வாங்கி 8 மணி நேரத்திற்குள் பழுதடைந்த பெரோடுவா பேசா காரை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புரோடுவா நிறுவனம் தெரிவித்திருந்தது.

வாடிக்கையாளரின் புகாருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புரோடுவா தரப்பு உத்தரவாதமிட்டிருப்பதாக புரோடுவா நிறுவனத்தின் தலைவர் JH ரொஸ்மான் ஜாஃபார் கூறினார்.

இதுக்குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாதிக்கப்பட்ட நாகக்கன்னி சுப்ரமணியத்துடன் தொடர்பு கொண்டு பேசப்பட்டதாக ரொஸ்மான்அறிவித்தார்.

நாகக்கன்னிக்கு தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள வேறொரு கார் வழங்கப்பட்டதாகவும் அவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு மற்றொரு காரை தேர்ந்தெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ரொஸ்மான் விளக்கினார்.

Related News