May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர் அம்னோ மாநில ஒற்றுமை அரசாங்கத்திற்கு உடன்பட வாய்ப்பில்லை
தற்போதைய செய்திகள்

ஜொகூர் அம்னோ மாநில ஒற்றுமை அரசாங்கத்திற்கு உடன்பட வாய்ப்பில்லை

Share:

மாநிலத்தில் ஒரு ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பக்காத்தான் ஹராப்பான் கட்சி கொடுத்த அழுத்தத்திற்கு ஜொகூர் அம்னோ அடிபணிய வாய்ப்பில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தேசிய அளவில் அம்னோவின் செல்வாக்கு குறைந்து வருவதால் பக்காத்தான் ஹராப்பான் உடனான ஒத்துழைப்பை தொடர்ந்தால் '' mixed marriage'' உருவாகுவதற்கு தடையாக இருக்கும் என்று எக்கெடெமி நுசான்தாராவிலிருந்து அஸ்மி ஹாஸான் கூறினார்.

இவை அம்னோ கட்சிக்கு எந்த வகையிலும் பயனளிக்காததோடு மலாய் வாக்காளர்கள் மத்தியில் அம்னோவின் நிலைப்பாட்டை கெடுக்கிறது என்று அஸ்மி ஹாஸான் விவரித்தார்.

இதுக்குறித்து அமனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் எழுப்பிய ஆலோசனைக்கு அஸ்மி ஹாஸ்ஸான் பதிலளித்தார்.

Related News