வயது குறைந்தப் பிள்ளைகளை ஒரு தலைபட்சமாக மதம் மாற்றம் செய்யும் மாநில சட்டங்கள், சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி 14 பேர் தொடுத்துள்ள வழக்கில் குறுக்கிடுவதற்கு கோலாலம்பூர் ஷரியா வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு விண்ணப்பத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகளை முடிவு செய்வதற்கு நடைபெற்ற வழக்கில் அந்த 14 பேர் தொடுத்துள்ள வழக்கில் தாங்களும் ஒரு தரப்பாக பங்கு கொள்வதற்கு ஷரியா வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக வாதிகள் தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் அனுமதித்தால் அவர்களின் பிள்ளைகளை மதம் மாற்றம் செய்ய முடியும் என்று பெர்லிஸ் உட்பட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாநில சட்டங்கள் செல்லத்தக்கது அல்ல என்று அறிவிக்கக் கோரி அந்த 14 பேரும் வழக்கு தொடுத்துள்ளனர்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


