May 21, 2026
Thisaigal NewsYouTube
அடித்து, துன்புறுத்தி மனைவிக்குக் கொலை மிரட்டல் விடுத்த ராணுவ அதிகாரி
தற்போதைய செய்திகள்

அடித்து, துன்புறுத்தி மனைவிக்குக் கொலை மிரட்டல் விடுத்த ராணுவ அதிகாரி

Share:

மலாக்கா, சுங்கை ஊடாங் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் நடந்த கணவன் மனைவி சண்டை குறித்த காணொலி ஒன்று வைரலானது. அதில், ராணுவ அதிகாரி ஒருவர் தமது மனைவியை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்து விடுவதாக தனது மனையை மிரட்டி உள்ளார்.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேது நடந்த இந்த விவகாரம் தொடர்பில் அவர் போலீஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் என மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ வீரா ஜைனோல் சமாஹ் தெரிவித்தார்.

38 வயதான பெண்ணிடம் இருந்த தமது தரப்பு பெற்றுள்ள புகாரில், சுங்கை ஊடாங் ராணுவ முகாமில் பணி புரியும் 25 வயதுடைய தமது கணவர் தம்மை அடித்துத் துன்புறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக டத்தோ வீரா ஜைனோல் சமாஹ் கூறினார்.

இந்த விவகாரம் குடும்ப வன்முறைச் சட்டம் 1994இன் படியும் குற்றவியல் சட்டம் 232இன் படியும் விசாரிக்கப்பட உள்ளதாக டத்தோ வீரா ஜைனோல் சமாஹ் மேலும் சொன்னார்.

Related News