May 20, 2026
Thisaigal NewsYouTube
கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது
தற்போதைய செய்திகள்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது

Share:

கோல திரங்காணு பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த கொடூர சாலை விபத்தில், 18 வயது இளைஞரின் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் சுமார் 3.36 மணியளவில் நிசான் வெனெட் இரக சிறிய வேனும் வோக்ஸ்வாகன் கோல்ஃப் ஜிடிஐ காரும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கோல திரங்காணு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குடும்பம் பயணித்த வோக்ஸ்வாகன் இரக காரானது, கோல திரங்காணு நகர மையத்திலிருந்து லோசோங் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், அந்தக் கார் எதிர்புற சாலையில் புகுந்து பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை ஓட்டிச் சென்ற சிறிய வேனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் தாக்கத்தில் மின்கம்பம் சரிந்து வேனை ஊடுருவி, இளைஞரின் தலையை துண்டாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவர் வா ஹான் கியோங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அஸ்லி நூர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

மலேசியாவில் எபோலா பாதிப்புகள் இல்லை - சுகாதார அமைச்சு உறுதி

மலேசியாவில் எபோலா பாதிப்புகள் இல்லை - சுகாதார அமைச்சு உறுதி

நெடுஞ்சாலைகளில் ‘ஸ்மார்ட் லேன்’ பயன்பாடு: போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் குறைகின்றன

நெடுஞ்சாலைகளில் ‘ஸ்மார்ட் லேன்’ பயன்பாடு: போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் குறைகின்றன