May 20, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

Share:

ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கி பகுதியில் உள்ள டூசுன் பாந்தி ஆர்&ஆர் -இல், இன்று வழக்கம் போல காலை உணவருந்திக் கொண்டிருந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், அக்கடைக்கு திடீர் வருகை புரிந்து, அங்கு காலை உணவருந்தியுள்ளார்.

மாமன்னரை நேரில் கண்டவுடன், அங்கிருந்தவர்கள் தங்களது கண்களை நம்பமுடியாமல் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

மிக இயல்பாக லோந்தோங் உணவை வாங்கிய மாமன்னர், அதையே அங்கேயே அமர்ந்து இரசித்து ருசித்து சாப்பிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் மாமன்னருடன் கைகுலுக்கி புகைப்படமும் எடுத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related News