எல்எல்எம் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 34 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள விவேக சாலை வழித்தடமான ஸ்மார்ட் லேன் முறையானது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு சாலை விபத்துகளைக் குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
தொடக்கத்தில் அவசரக்கால பாதையை வாகனங்கள் பயன்படுத்துவதில் பயனர்களிடையே தயக்கம் இருந்தாலும், முறையான விழிப்புணர்வு பரப்புரைகள் மூலம் தற்போது மக்கள் இந்த வசதியை நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருவதாக அதன் தலைமை இயக்குநர் முகமது ஹட்ஸ்மிர் யுசோஃப் தெரிவித்துள்ளார். புதிய பாதைகளை நிர்மாணிப்பதற்கு அதிக நேரமும் செலவும் ஆகும் சூழலில், குறுகிய காலத்தில் கூடுதல் பாதையை வழங்கி போக்குவரத்து ஓட்டத்தைச் சீராக்குவதே இந்த ‘ஸ்மார்ட் லேன்' திட்டத்தின் முக்கிய நோக்கம் என அவர் மேலும் கூறினார்.








