May 21, 2026
Thisaigal NewsYouTube
பெண் மருத்துவரும், கணவரும் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

பெண் மருத்துவரும், கணவரும் இறந்து கிடந்தனர்

Share:

பல் மருத்துவரான 30 வயது பெண்மணியும் அவரின் பிரிட்டிஷ் கணவரும் சிரம்பானில் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் இறந்து கிடந்தது இன்று மாலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இத்தம்பதியர் கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் போர்ட்டிக்சனின் உள்ள அரசாங்க கிளினிக் ஒன்றில் பல் மருத்துவதாக பணிபுரிந்து வந்த நிலையில் அவரின் 30 வயது மதிக்கத்தக்க பிரிட்டிஷ் கணவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

அத்தம்பதியர் தற்கொலை செய்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

Related News