May 21, 2026
Thisaigal NewsYouTube
3 மாநிலங்களில் மோசமடையும் வெள்ளப் பேரிடர்
தற்போதைய செய்திகள்

3 மாநிலங்களில் மோசமடையும் வெள்ளப் பேரிடர்

Share:

கிழக்குக் கரை மாநிலங்களான கிளாந்தான், பகாங், திரங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலவரம் மோசமடைகிறது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, பகாங் மாநிலத்தில், 171 குடும்பங்களைச் சேர்ந்த 700 பேர் 15 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் அடைக்களம் நாடி இருக்கிறார்கள்.

கிளாந்தானில் மூவாயிரத்து 860 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 572 பேர் 82 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தங்கி இருக்கின்றனர்.

திரங்கானுவில் இரண்டாயிரத்து 402 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 808 பேர் 133 தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Related News