May 21, 2026
Thisaigal NewsYouTube
PADU திட்டத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

PADU திட்டத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்

Share:

மக்களின் சமூகவியல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் சுய விவர குறிப்புகளை பதிவு செய்வதற்கு அரசாங்கம் நேற்று தொடங்கியுள்ள PADU முதன்மை தரவுகள் தளத்தில் காணப்படும் குறைபாடுகள் வெகுவிரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி உறுதி அளித்துள்ளார்.

அரசாங்கத்தின் PADU திட்டத்தில் ஒருவரின் விவரக்குறிப்புகளை ரத்து செய்வதற்கும், கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கும் ஒருவரின் அடையாள கார்டு எண் பயன்பாடு மட்டும் போதுமானது என்றும், இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்றும் எழுந்துள்ள கேள்விக்கு நேற்று இரவே விடைகாணப்பட்டு, அந்த குறைப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ரஃபிஸி ரம்லிi குறிப்பிட்டார்.

அதேவேளையில் இத்திட்டத்தில் உள்ள மற்ற குறைபாடுகள், பலவீனங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு, அவற்றை களைவதற்கான நடவடிக்கையை PADU பணிக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News