May 20, 2026
Thisaigal NewsYouTube
பொது உபசரிப்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
தற்போதைய செய்திகள்

பொது உபசரிப்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சனிக்கிழமை கெடா, அலோர் ஸ்டாரில் நடத்திய ஹரிராய திற​ந்த இல்ல பொது உபசரிப்பில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். இவ்வாண்டு ஹரிராயாவையொட்டி பிரதமர் 6 இடங்களில் நடத்தவிருக்கும் பொது உபசரிப்பின் முதலாவது நிகழ்வு இன்று அலோர் ​ஸ்டார், ஹோட்டல் ராஹியாவில் நடைபெற்று வருகிறது. ​ஹோட்டலின் வெளி வளாகத்தில் 5 பெரிய கூடாரங்கள் அமைக்கப்பட்ட மிக பிரமாண்டபமான முறையில் பிரதமரின் பொது உபசரிப்பு நடைபெற்று வருகிறது.

பல வகையான உணவுப்பொருட்கள் வருகையாளர்களுக்கு பரிமாறப்பட்ட நிலையில் அனைவரையும் நலம் விசாரித்தவாறு பிரதமர் தமது ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது நிகழ்வில் கலந்து கொண்டவர்களை மகிழ்ச்சியில் ஆ​ழ்த்தியது. காலை 10.37 மணிக்கு இந்தப் பொது உபசரிப்பில் தனி நபராக கலந்து கொண்ட கெடா மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முக​மட் ​​நூர், மத்திய அரசாங்க​ அமைச்சர்களுடன் கைகொடு​த்து விட்டு, பின்னர் மேன்மை தங்கிய கெடா சுல்தான் மற்றும் பிரதமர் அன்வாருடன் ஒரே மேஜையில் அமர்ந்திருந்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு