May 21, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசாங்கம் பொருளாதார அம்சங்களில் கவனம்
தற்போதைய செய்திகள்

மடானி அரசாங்கம் பொருளாதார அம்சங்களில் கவனம்

Share:

2024 ஆம் ஆண்டிற்கான மடானி அரசாங்கத்தின் முழு கவனமானது, , உள்நாட்டு, வெளிநாட்டுமுதலீட்டாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதாகும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற இவ்வாண்டிற்கான முதலாவது அமைச்சவைக்கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இக்கருத்தினையே வலியுறுத்தியிருப்பதாக ஃபாஹ்மி ஃபாட்ஸில் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்க சார்பு நிறுவனங்களான ஜிஎல்சி யை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியிருப்பதாக ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

Related News