ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை இழிவுப்படுத்தியதாக ஆடவர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இன்ரா மூலியா அமாட் என்ற அந்த நபர், பிறர் முகம் சுளிக்கும் அளவிற்கு, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி, முகநூலில் சுல்தானை அவமதிக்கும் கருத்தைப் பதிவிறக்கம் செய்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி ப்ரிசில்லா ஹேமாமாலினி நடராஜா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை இன்ரா மூலியா மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

கோல திரங்காணுவில் கோர விபத்து : 18 வயது இளைஞரின் தலை துண்டானது


