May 21, 2026
Thisaigal NewsYouTube
14 நாட்களுக்கு பணிகளை நிறுத்தும்படி MPKS உத்தரவு
தற்போதைய செய்திகள்

14 நாட்களுக்கு பணிகளை நிறுத்தும்படி MPKS உத்தரவு

Share:

ஜெராம், பத்து 19, ஜாலான் பாக் இத்தாம் - மில் உள்ள கால்நடை பண்ணை உரிமையாளருக்கு 14 நாட்களுக்கு பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள முடியாமல் புகார் அளித்த அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தனியார் நிலத்தில் கால்நடை வளர்ப்பு நடத்தப்பட்டாலும் அவை சுற்றுப்புற மக்களுக்கு பாதிப்பை விளைவிக்கிறது என்று கோலசிலாங்கூர் நகராண்மைக் (MPKS) தலைவர் முஹமாட் ஹனாஃபி பஸ்ரி தெரிவித்தார்.

இப்பண்ணைக்கு முன்புறத்தில் ஜெராம் சிகிச்சையகம் இருப்பதால் அவ்விடத்திற்கும் இவை இடையூறாக இருப்பதால் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்கும்படி சுகாதார, சுற்றுச்சூழல் துறை மனு ஒன்றை வெளியிட்டது.

Related News