May 21, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டுப் பெண் கொலை, இருவர் கைது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டுப் பெண் கொலை, இருவர் கைது

Share:

அந்நிய நாட்டுப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இக்கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படும் இரு நபர்களை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர்பாரு, தாமான் உங்கு தும் அமினாவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த இரு நபர்களும் புலன் விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போ​லீசார் ​நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர் என்று ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹின்டர் சிங் தெரிவித்தார்.

அந்நிய நாட்டைச் சேர்ந்த 41 வயது பெண்ணும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தம்பியான 24 வயது நபரும் கைது செய்யப்பட்டு, இக்கொலைக்கு அவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கத்தியை போ​லீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ​மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி பல்வீர் சிங் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணின் சடலம், குப்பைத் தொட்டி ஒன்றில் கடந்த ஞாயிற்று​க்கிழமை பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டதாக ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

Related News