May 21, 2026
Thisaigal NewsYouTube
அக்காவைக் கொன்றதாக தம்பி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அக்காவைக் கொன்றதாக தம்பி மீது குற்றச்சாட்டு

Share:

ஸ்கூடாய். தாமான் உங்கு துன் அமினாபில் உள்ள வீட்டில் தனது அக்காவை கடந்த வாரம் கொலை செய்ததாக இந்தோனேசிய ஆடவர் மீது இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தமது அக்காவான 42 வயது Syarifah Ilawatiவை 24 வயது கொண்ட Said Afendi, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு கொலை செய்ததாக Majistret Nurkhalida Farhana Abu Bakar முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தமக்குப் புரிந்ததாக Said Afendi தலையை அசைத்தார்.

கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்டிற்கு உட்பட்டதால், எந்தவிதமான வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திடுக்கும் நிலையில், இந்த வழக்கு எதிர்வரும் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News