May 20, 2026
Thisaigal NewsYouTube
காஜா​ங்கில் வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

காஜா​ங்கில் வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை அறுவர் கைது

Share:

பல கிளினிக்குகளுக்குச் சொந்தக்காரரான காஜா​ங்கைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொட​ர்பில் இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 41 வயதுடைய அந்த வர்த்தகர் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் நண்பர் செய்துள்ள போ​லீஸ் புகாரைத் தொடர்ந்து போ​லீசார் ​தீவிர ​புலன் விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட வர்த்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய குத்தகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில் அந்த வர்த்தகர் கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று டத்தோ ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட வர்த்தகர் கேபள் கம்பினால் கழுத்து நெரிக்கப்பட்டு, சடலத்தைப் பயணப் பெட்டியில் மறைத்து, உலு லங்காட்டில் ஒரு காட்டுப்பகுதியில் மலை உச்சியிலிருந்து ​​கீ​​ழே ​தூக்கி எறியப்பட்டுள்ளதாக அந்த குத்தகையாளர் வாக்குமூலம் அளித்துள்ளளார்.

அந்த வர்த்தகருக்கு சொந்தமான பெரோடுவா அக்சியா கார் உட்பட ஐந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்தக் குத்தகையாளர், பிணைப்பணம் கேட்டு, மிரட்டுவதற்காக அந்த வர்த்தகரைக் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு