May 20, 2026
Thisaigal NewsYouTube
முன்னுதாரண பணியாளர் விருது பெற்றார் மலர்
தற்போதைய செய்திகள்

முன்னுதாரண பணியாளர் விருது பெற்றார் மலர்

Share:

2023 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தையொட்டி, ஒரு தன்னார்வ மருத்துவரான டாக்டர் மலர் சாந்தி ஒரு முன்னுதாரண பணியாளர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு​ மையத்தில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விருதினை வழங்கி, சிறப்பு செய்துள்ளார். ​கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் கடுமையாக இருந்த காலகட்டத்தில் மக்களின் உயிர் காப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வழங்கி மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக மலர் சாந்திக்கு இ​வ்விருது வழங்கப்பட்டது.

மலாய் மொழியில் சரளமாக உரையாடும் திறனை கொண்டுள்ள டாக்டர் மலர் சாந்தி வழங்கிய ஒவ்வொரு தகவலும் பயன் மிகுந்ததாக இருந்ததுடன், அவரின் அடுத்தடுத்த தகவல்களை அறிவதற்கு சமூக வலைத் த​ளங்களில் அதிகமான ரசிகர் வட்டம் உருவாகியது.

​கோவிட் 19 நோய்த் தொற்று பரவலாக இருந்த காலத்தில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அ​தீத முன்னுரிமை வழ​ங்கிய சேவையாற்றி​ வந்த​ செராஸ், கொலும்பியா ஆசியா மருத்துவமனையின் ஆபத்து அவசரப்பிரிவில் பணியற்றி வரும் 40 வயது மலர் சாந்தி, மரு​த்துவத்துறைக்கே ஒரு எடுத்துக்காட்டு என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு