May 21, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து திருடிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து திருடிய நபர் கைது

Share:

அம்பாங், தாமான் கோசாஸ் பகுதியில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வீடு புகுந்து பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த நபர், நேற்று வியாழக்கிழமை கோலாாலம்பூர் ஜாலான் பிரிமா செதாப்பா கில் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டு வந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த நபரை கைது செய்தது மூலம் சம்பந்தப்பட்ட வீட்டில் களவாடப்பட்ட தங்க ஆபரணங்கள், வெளிநாட்டுப் பண நோட்டுகள் மற்றும் விலை உயர்ந்த இதரப பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஏசிபி முகமது அசாம் குறிப்பிட்டார்.

Related News