May 21, 2026
Thisaigal NewsYouTube
சோதனையின்போது களவாடப்பட்ட 85,000 வெள்ளி - 3 காவல் துறை அதிகாரிகள் கைது !
தற்போதைய செய்திகள்

சோதனையின்போது களவாடப்பட்ட 85,000 வெள்ளி - 3 காவல் துறை அதிகாரிகள் கைது !

Share:

கோலாலம்பூர், ஜாலான் சிலாங்ஙில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது, 85 ஆயிரம் வெள்ளியைத் திருடியதாக நம்பப்படும் 3 காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26, 30, 35 வயதுடைய அந்த அதிகாரிகள் நேற்று தொடங்க் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் அல்லாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிகிழமை நள்ளிரவு 12.36 மணி அளவில் காவல் துறைக்குப் இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததாகக் கூறும் அல்லாவுடின் அப்துல் மஜிட், விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் பொதுமக்கள் தங்களின் ஊகங்களின் அடிப்படையில் கருத்துகளைப் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

Related News