May 21, 2026
Thisaigal NewsYouTube
அயோப் கானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

அயோப் கானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Share:

போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை க்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் ஒருவர், ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 062 வெள்ளி தொடர்பில் விளம்பர நிறுவனம் ஒன்றை ஏமாற்றி விட்டதாக செய்தியாளர் கூட்டத்தில் அயோப் கான் பேசியது தொடர்பில் வழக்கறிஞர் கமல் ஹிஷாம் ஜாபர் என்பவர் இந்த அவதூறு வழக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு தொடுத்து இருந்தார்.

ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக அயோப் கான் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயரை அயோப் கான் குறிப்பிடவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜியோக் ஹாக் டீ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News