மலாக்கா மாநிலம், அலோர் காஜா, கோலா சுங்கை பாரு பகுதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை, பயண கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால், நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, இ-ஹெய்லிங் பெண் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை சுமார் 12.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 41 வயதுடைய ஓட்டுநர், கழுத்து நெரிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானதுடன், உடலின் பல பகுதிகளில் காயங்களும் வீக்கமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பயணக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காயமடைந்த பெண் ஓட்டுநர் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அலோர் காஜா போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.








