May 19, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் - தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
தற்போதைய செய்திகள்

சபாவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் - தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

Share:

சபா மாநிலத்தில், பினங்கா வனக் கட்டுப்பாட்டுப் பகுதியில், தலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தந்தங்களுக்காக அந்த யானை கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சபா மாநில வனவிலங்குத் துறை இயக்குநர் முகமட் சோஃபியான் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த யானையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்ததற்கான வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லாத நிலையில், அந்த யானையின் உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழை மற்றும் சேறு காரணமாக, தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு உடனடியாக செல்ல முடியவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியை தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள அதிகாரிகள், யானையின் மீதமுள்ள தலைப்பகுதியை வைத்து சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related News

அடுத்த பொதுத்தேர்தலிலும் பண்டான் தொகுதியை பிகேஆர் தக்க வைக்க வேண்டும் / தொகுதித் தலைவர்களுக்கு அன்வார் உத்தரவு

அடுத்த பொதுத்தேர்தலிலும் பண்டான் தொகுதியை பிகேஆர் தக்க வைக்க வேண்டும் / தொகுதித் தலைவர்களுக்கு அன்வார் உத்தரவு

பெட்ரோல், டீசல் விலை குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட பெண்ணுக்கு 4000 ரிங்கிட் அபராதம்

பெட்ரோல், டீசல் விலை குறித்து பொய்யான தகவலை வெளியிட்ட பெண்ணுக்கு 4000 ரிங்கிட் அபராதம்

கட்சியிலிருந்து விலகியதால் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் - ரபிசி வேண்டுகோள்

கட்சியிலிருந்து விலகியதால் எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் - ரபிசி வேண்டுகோள்

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை நெறித்துத் தாக்கிய 4 இளைஞர்கள் கைது - மலாக்காவில் பயங்கரம்

இ-ஹெய்லிங் ஓட்டுநரின் கழுத்தை நெறித்துத் தாக்கிய 4 இளைஞர்கள் கைது - மலாக்காவில் பயங்கரம்

16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்

16 மலேசியர்களைத் தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு அன்வார் கடும் கண்டனம்